பி.பி.எல். டி-20 லீக் கிரிக்கெட் போட்டி-வில்லியனூர் அணி வெற்றி

புதுச்சேரி பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடரில், ஏனாம் அணியை 51 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வில்லியனூர் அணி வெற்றி பெற்றது.

புதுச்சேரி துத்திப்பட்டு மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், வில்லியனூர் மோகித் கிங்ஸ் மற்றும் ஏனாம் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வில்லியனூர் அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய ஏனாம் அணி, வில்லியனூர் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது,

இறுதியில் ஏனாம் அணி 19 புள்ளி 1 ஒவரில், 136 ரன்கள் மட்டுமே எடுத்து, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் வில்லியனூர் அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Exit mobile version