‘அவரும் நானும்’ 2-ஆம் பாக நூலை வெளியிட்டார் துர்கா ஸ்டாலின்

முதலமைச்சரின் துணைவியார் துர்கா ஸ்டாலின் எழுதிய ‘அவரும் நானும்’ நூலின் இரண்டாம் பாக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

முதலமைச்சர் ஸ்டாலின் உடனான, 50 ஆண்டு கால திருமண வாழ்க்கை குறித்த பயணத்தை அவரது துணைவியார் துர்கா ‘அவரும் நானும்’ என்ற தலைப்பில் ஒரு பத்திரிக்கையில் எழுதிய தொடரின் முதல் பாகம், புத்தகமாக ஏற்கனவே வெளியானது.

இந்நிலையில், இந்நூலின் இரண்டாம் பாக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் எழுத்தாளர் சிவசங்கரி கலந்து கொண்டு நூலினை வெளியிட்டார். டாபே குழுமத்தின் தலைவர் மல்லிகா சீனிவாசன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஏற்புரை நிகழ்த்திய துர்கா ஸ்டாலின், தான் எழுதுவதற்கு, பெரிதும் ஊக்கமாக இருந்தது தனது கணவர் என பெருமையுடனும், நெகிழ்ச்சியுடனும் குறிப்பிட்டார்.

Exit mobile version