சிறுநீரக திருட்டிலும் திமுகவினர் மீது சந்தேகம் – அண்ணாமலை !

நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறி தொழிலாளர்களை ஏமாற்றி, சிறுநீரகத்தை முறைகேடாக பெற்ற மோசடியில் திமுக நிர்வாகிகள் ஈடுபட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும், அது தொடர்பாக தமிழக அரசு சிறப்பு புலனாய்வு குழு அமைக்கவும் பி.ஜே.பி. தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
நாமக்கல் மாவட்ட பி.ஜே.பி. அலுவலகத்தில், கட்சியின் முன்னாள் மாநிலப் பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷின் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் அண்ணாமலை கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறுநீரக முறைகேடு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வலியுறுத்தினார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் டி.எஸ்.பி. சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்ய உள்ளதாக தகவல் வெளியான விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு தீர்வு காண அண்ணாமலை வலியுறுத்தினார்.

Exit mobile version