ஆம்ஆத்மியிலிருந்து விலகினார் பெண் எம்எல்ஏ

பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினரும், பாடகியுமான அன்மொல் கஹன் மான், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததுடன், கட்சியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

பாடகியான இவர் 2020ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து, 2022-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பஞ்சாப் மாநிலம் ஹரர் தொகுதியில் வெற்றிப் பெற்றார். பகவந்த் மான் அமைச்சரவையில் சுற்றுலா கலாச்சாரத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்த அவர், கடந்த ஆண்டு அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ள அவர், ஆம் ஆத்மியிலிருந்தும் விலகுவதாகவும், அரசியலை விட்டே விலகுவதாகவும் அறிவித்துள்ளார். அமைச்சரவையிலிருந்து நீக்கியதால் தான், கட்சியை விட்டே அவர் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

Exit mobile version