அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பான விசாரணை விரைவில் தொடங்க இருப்பதால், கால நிர்ணயம் செய்ய வேண்டாம் என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டது.
அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட சிவில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அது முடிவடையும் வரை இரட்டை இலைச் சின்னத்தையோ, கட்சியின் பெயரையோ எடப்பாடி பழனிசாமி பயன்படுத்துவற்கு தடைவிதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம், ஓ.பன்னீர் செல்வம், பெங்களூரு புகழேந்தி உள்ளிட்டோர் மனு அளித்துள்ளனர். அதை விரைந்து விசாரிக்க காலக்கெடு விதிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனு இன்று நீதிபதி சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அப்போது தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் ஆஜராகி, விரைவில் விசாரணை தொடங்க இருப்பதால், கால நிர்ணயம் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். இதையடுத்து வழக்கை வரும் 10 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.