முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் விஜய் கொடியை காண்பித்த மாணவர்கள்!

சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் த.வெ.க கொடி மற்றும் நடிகர் விஜய் படத்தை, இரண்டு கல்லூரி மாணவர்கள் காட்டியதால் சலசலப்பு ஏற்பட்டது.

கலைவாணர் அரங்கில் நடைபெற்ற கருணாநி நூற்றாண்டு விழா கருத்தரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு, முதலமைச்சர் வருவதற்கு முன்னர், முன்வரிசையில் அமர்ந்திருந்த கல்லூரி மாணவர்களில் இரண்டு பேர் தமிழக வெற்றிக் கழக கொடி மற்றும் நடிகர் விஜய் படத்தை தூக்கி காண்பித்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பிற்காக இருந்த போலீசார் உடனடியாக அந்த மாணவர்களை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இருவரும், ராயப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது. முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால், இருவரும் கல்லூரியில் இருந்து 15 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version