சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்காக 208 கோடி ரூபாய் மதிப்பில், 120 புதிய மின்சாரப் பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளது. அதன் சேவையை முதல்வர் துவங்கி வைத்தார்.
கரியமில வாயு புகையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய-மாநில அரசுகள், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன. அதன்படி, தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் சென்னை வியாசர்பாடியில் 47 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் மின்சாரப் பேருந்து பணிமனை கட்டப்பட்டுள்ளது.
இந்தப் பணிமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அப்போது, அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், முதற்கட்டமாக 120 மின்சாரப் பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்தில் சீட் பெல்ட், சிசிடிவி கேமரா, மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேக வசதி கொண்ட இருக்கை உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இந்தப் பேருந்தின் சேவையை முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.