அதிமுகவின் திட்டங்களை கிடப்பில் போடுவதுதான் திமுகவின் வேலை – EPS

காவிரி-கோதாவரி இணைப்பு, நடந்தாய் வாழி காவிரி போன்ற வேளாண் மக்களின் வாழ்வாதார திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

“மக்களை காப்போம்-தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்தை முன்வைத்து சட்டமன்ற தொகுதி வாரியாக, எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில், பொதுமக்களையும், விவசாயிகளையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

மாலையில் நாகை அவுரித்திடலில் உரையாற்றிய அவர், உரத்தட்டுப்பாடு, தரமற்ற விதைநெல், கடைமடை வரை காவிரி நீர் வராத நிலை போன்ற இடையூறுகள் திமுக அரசால் ஏற்பட்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.

மேட்டூரிலிருந்து டெல்டா கடைமடை வரை 31 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள அனைத்து காவிரி கால்வாய்களை காங்கிரீட் தளம் அமைக்கும் திட்டமும் திமுக அரசால் கிடப்பில் போடப்பட்டுவிட்டதாக அவர் கூறினார்.

Exit mobile version