முதலீடுகளை ஈர்ப்பதில் தி.மு.க., அரசு தோல்வி அடைந்துவிட்டது என, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக, ஆங்கில செய்தி சேனலில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி, எடப்பாடி பழனிசாமி, தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தொழில்துறை மேம்பாடு என்பது, வீண் வேலைத்திட்டம் அல்ல. இது இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார சமத்துவத்திற்கான பணி என்று குறிப்பிட்டுள்ளார்.
முதலீடுகளை ஈர்ப்பதில் திமுக அரசு தோல்வி அடைந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு வந்த முதலீட்டாளர்கள், வேறு மாநிலத்திற்கு செல்ல விரும்புகின்றனர். மேலும், திமுக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைத் தாண்டி, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை என்றும், எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
நமது தொழில்துறை செயலிழந்து விட்டது. இனிவரும் காலங்களில் தொழில்துறையை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல, அதிமுக உறுதி பூண்டுள்ளது என்றும், தனது பதிவில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
















