சென்னை மாநகராட்சி பள்ளிகள் அனைத்திலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி மன்ற சாதாரண கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. அப்போது உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த பிரியா, தற்போது 245 பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள பள்ளிகளில் விரைவில் பொருத்தப்படும் என கூறினார்.

வரும் காலங்களில் மாநகராட்சி பள்ளிகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஏ.டி.எம்-கள் நிறுவப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து, பாடி, துரைப்பாக்கம் உள்ளிட்ட 7 இடங்களில் காலநிலை எதிர்ப்பு கடற்பாசி பூங்காக்கள் அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பட்டினப்பாக்கத்தில் உள்ள டிமாண்டி சாலைக்கு மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் பெயர் சூட்டவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.