திருக்கடையூரில் நடைபெற்றுவரும்  மாடு குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயத்தில் மாட்டு வண்டி பந்தயம் சீறிப்பாய்ந்த குதிரைகள்

திருக்கடையூரில் நடைபெற்றுவரும் மாடுகளுக்கான எல்கை பந்தயத்தில் மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்த நிலையில் ஜாக்கி இல்லாமல் ஓடிய மாட்டு வண்டி, மற்றும் ஜாக்கியோடு கவிழ்ந்த நிலையில் ஓடிய மாட்டு வண்டி:-

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் காணும் பொங்கல் ஆன இன்று 46 ஆம் ஆண்டு மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் துவங்கி நடைபெற்று வருகிறது. மாட்டு வண்டிகளுக்கான பந்தயத்தில் ஜாக்கிகளுடன் மாட்டு வண்டிகள் சீறி பாய்ந்து போட்டிகளில் பங்கேற்றன. போட்டி துவங்கிய இடத்தில் இருந்து 5கிலோமீட்டர் தூரம் எல்லைக்கோட்டை தொட்டு மீண்டும் துவங்கிய இடம் வந்தபோது ஒரு மாட்டு வண்டி கவிழ்ந்தது. ஜாக்கி கீழே விழுந்த நிலையில் ஜாக்கி இல்லாமல் மாட்டு வண்டி எல்லைக்கோட்டை வந்தடைந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் பெரிய மாடுகளுக்கான பந்தயத்தில் மாட்டுவண்டிகள் போட்டி போட்டுக் கொண்டு சீறிப்பாய்ந்த நிலையில் ஜாக்கியோடு கவிழ்ந்த நிலையில் சிறிது தூரம் மாட்டு வண்டி ஓடி பரபரப்பை ஏற்படுத்தியது. பார்வையாளர்கள் ஓடிச் சென்று வண்டியை நிமிர்த்துவிட்டு அந்த வண்டி மீண்டும் ஓடியது. அடுத்ததாக குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் துவங்க உள்ளது.

Exit mobile version