சீர்காழி அருகே அரசு கல்லூரியில் கெளரவ விரிவுரையாளர்கள் கண்ணை துணியால் கட்டிக்கொண்டு பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் புத்தூர் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் 23 பேர் கல்லூரி வளாகத்தின் வெளியே சாலையோரம் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படனர்.வெயிலில் சாலையோரம் அமர்ந்து கண்களை துணியால் கட்டிக்கொண்டு கோரிக்கை விளக்கி முழக்கம் எழுப்பார்.2-வது நாளாக இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.பணி நிரந்தரம், யு.ஜி.சி. ஊதியம், பி.எப்., 12 மாதம் ஊதியம், பெண்களுக்கு மகப்பேறு விடுப்புடன் கூடிய ஊதியம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தினை தொடர்ந்துள்ளனர்.
