விழுப்புரத்தில் உற்சாகமாக கொண்டாடிய ஹோலி பண்டிகை
விழுப்புரத்தில் வசித்து வரும் வட மாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகையை முன்னிட்டு நேற்று இரவு முதலே கொண்டாட்டங்களைத் தொடங்கிய நிலையில் இன்று காலை முதல் காமராஜர் வீதி, பழைய அனுமார் கோவில் தெரு, திரு.வி.க. வீதி, மற்றும் கீழ்பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வண்ணங்களைப் பூசி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் முன்னாள் நகர மன்ற தலைவர் ஜனகராஜ கலந்து கொண்டு அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். அங்குள்ள ஜெயின் கோவில்களில் வழிபாடு செய்து புத்தாடை அணிந்து இனிப்புகளை வழங்கியும், ஒருவருக்கொருவர் முகத்தில் வண்ணப்பொடிகளைப் பூசி வாழ்த்துக்களைப் பரிமாறியும் இப்பண்டிகையை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்
















