மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட ஹாக்கி விளையாட்டு வீரர்கள் சீர்காழியிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு பயணம். ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி அரை இறுதி போட்டியை காண புறப்பட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில் நிலையத்திலிருந்து 60 ஹாக்கி வீரர்கள் சென்னைக்கு புறப்படும் நிகழ்வு நடந்தது.
சென்னை எழும்பூரில் உள்ள எம்.ஆர்.கே ஹாக்கி சர்வதேச விளையாட்டு அரங்கில் ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி நவம்பர் 28 டிசம்பர் பத்து வரை நடைபெற்று வருகிறது.
இன்று 7 -ம் தேதி அரையிறுதி போட்டி எதிர்கொள்ளும் இந்தியா ஜெர்மனி விளையாட்டை காண்பதற்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் ஹாக்கி விளையாட்டு வீரர்களை மயிலாடுதுறை ஹாக்கி விளையாட்டு சங்கத்தின் மாவட்ட செயலாளர் சசிகுமார் தலைமையில் துணைத் தலைவர் முரளி, ஸ்டாலின் ஆகியோர் 60க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களை சீர்காழி ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.
















