சவுதியில் உடல் நலக்குறைவால் இறந்த கணவனின் உடலை மீட்டு தரக்கோரி அவரது மாற்றுத்திறனாளி மனைவி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் மனு அளித்து கோரிக்கை வைத்துள்ளார் :-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மேலமங்கநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு சுமதி என்ற மாற்றுத்திறனாளி பெண்ணுடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. நான்கு ஆண்டுகளாக சவுதியில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இதனிடையே கடந்த 20 நாட்களுக்கு முன்பு பணியில் இருந்த போது உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து குடும்பத்தாரிடம் மருத்துவ மனையிலிருந்து நலமுடன் இருப்பதாக பேசிவந்துள்ளார். தொடர்ந்து 25ஆம் தேதி கண்ணன் உடல் நலவுக்கு குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் இறந்து விட்டதாக அவரது மனைவி சுமதிக்கு சவுதியில் இருந்து சக பணியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த சுமதி மீண்டும் தொடர்பு கொண்டபோது அவர் வேலை பார்த்த நிறுவனத்தில் இருந்து முறையான தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் சந்தித்து சுமதி மனு அளித்தார். அம்மனுவில் தனது கணவனின் உடலை மீட்டு தர வேண்டும் எனவும் , கணவரின் ஊதிய தொகையை பெற்றுத் தர வேண்டும் எனவும் ஆட்சியரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்
