திருவாரூரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்.. நூற்றுக்கு மேற்பட்டோர் கைது

திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகில்..திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற நீதிமன்றம் அனுமதி வழங்கியும் தீபம் ஏற்ற தடை விதித்த தமிழக அரசையும்.. காவல்துறையும்.. கண்டித்து 100-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..

திருப்பரங்குன்றம் அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணியர் சுவாமி திருக்கோவில்.. மலை உச்சியில் கார்த்திகை  தீபம் ஏற்ற நீதிமன்றம் அனுமதி வழங்கியும், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தீபம் ஏற்ற அனுமதிக்காத தமிழக அரசை கண்டித்தும், காவல்துறையை கண்டித்தும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில்,

திருவாரூரில்.. இந்து முன்னணி அமைப்பினருக்கு ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையினர் அனுமதி வழங்காத நிலையில்.. திருவாரூர் மேம்பாலம் பகுதியில் இருந்து100-க்கும் மேற்ப்பட்ட இந்து முன்னணியினர்…
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற நீதிமன்றம் அனுமதி வழங்கியும் தீபம் ஏற்ற அனுமதி வழங்காமல் முருகப்பெருமானை அவமதிக்கும் வகையில் தடை விதிக்கும் திமுக அரசை கண்டித்தும், காவல்துறையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக வந்தனர்.
இந்த நிலையில் புதிய ரயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற போது.. காவல்துறையினர் வழி மறித்து அனைவரையும் கைது செய்தனர்.
அப்போது காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது மேலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது..
தொடர்ந்து காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை பேருந்தில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் அழைத்து வைத்துள்ளனர்.

Exit mobile version