செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது, குறிப்பாக குளிர்கால மாதங்களில் பனிப்பொழிவு ஏற்படுவது வழக்கம் அந்த வகையில் செங்கல்பட்டு ஜி.எஸ்.டி சாலை மற்றும் மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம் செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது, இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாகச் செல்கின்றன,
தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் டிட்வா புயல் காரணமாக தொடர் மழை பெய்து வந்த நிலையில் தற்போது மழை விடுபட்ட நிலையில் பனிப்பொழிவு காணப்பட்டது.


















