மயிலாடுதுறை மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு, மாறிவரும் பருவநிலை காரணமாக பொதுமக்கள் அச்சம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு, மாறிவரும் பருவநிலை காரணமாக பொதுமக்கள் அச்சம் :-

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று காலை கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை நிறைவடைந்து உள்ள நிலையில் மூடுபனி நிலவியது, இன்று காலை அதிக மூடுபனி நிலவுகிறது. பருவநிலையில் ஏற்பட்ட மாற்றமா என்று பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பனிப்பொழிவு காரணமாக நெற்பயிர்களுக்கு இலைப்பேன் நோய் மற்றும் பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறும் நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மூடுபனி நிலவுவதால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் இருக்கும் நிலையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்கின்றன. மயிலாடுதுறை,சீர்காழி,தரங்கம்பாடி, செம்பனார்கோயில் குத்தாலம், வைத்தீஸ்வரன் கோயில், கொள்ளிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Exit mobile version