டிட்வா புயல் சென்னையை நோக்கி நகர்ந்ததன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மழை நின்றது. தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்த மழை நீர் வெளியேறிக் கொண்டிருந்த நிலையில் பாதிக்கப்பட்ட வயல்களை கணக்கெடுக்கும் பணியில் வேளாண் துறை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் திடீரென நேற்று மாலை 6 மணி அளவில் திருவாரூர் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் மூன்று மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதே போல மன்னார்குடி, நீடாமங்கலம், நன்னிலம், குடவாசல், கமலாபுரம், கண்கொடுத்தவணிதம், கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் 5 மணி நேரத்திற்கு மேல் கனமழை கொட்டி தீர்த்தது.
குறிப்பாக மாலை 6 மணிக்கு ஆரம்பித்த மழை இரவு 10 மணி வரை இடைவிடாமல் தொடர்ச்சியாக கனமழையாக பெய்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இந்த 4 மணி நேரத்தில் திருவாரூரில் 10.8 சென்டிமீட்டர் மழை பொழிவும், நீடாமங்கலத்தில் 7.8 சென்டிமீட்டர் மழை பொழிவும், மன்னார்குடியில் 7.5சென்டிமீட்டர் மழை பொழிவும் இருந்ததாக திருவாரூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் கனமழை காரணமாக திருவாரூர் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆத்தா குளம் பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர் உடனடியாக மாவட்ட நிர்வாகம் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் பாதிக்கப்பட்டு தண்ணீர் வடிந்த நிலையில் மீண்டும் வீடுகளுக்கு தண்ணீர் வந்ததால் போது கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளோம் உடனடியாக நிரந்தர வடிகால் வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
FILE NAME: TVR HEAVY RAIN HOUSE PROBLEM NEWS 3.12.25
