வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும், சென்னைக்கு அருகே மாமல்லபுரம் அருகே 3 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தாற்போது புயல் கரையை கடந்துகொண்டு இருக்கிறது. இதன் எதிரொலியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நல்லிரவில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்பதால் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் தொடர் மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பல இடங்களில் நெல் பயிர்கள் நீரில் மூழ்கிக் காட்சியளிக்கிறது.
சாலைகளிலும் மழை நீர் வெள்ளநீர் ஓடுகிறது பல இடங்களில் வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது இதனால் பொதுமக்கள் மிகச் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் மேலும் வளம் நீடிக்கும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
