தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் தென் மாநிலங்களின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் விளைவாக தமிழகத்தின் பல இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று (செப்.16) கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்கள் :
ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி.
நாளை (செப்.17) கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்கள்:
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம்.
செப்டம்பர் 18-ஆம் தேதி கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்கள்:
நீலகிரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு.
செப்டம்பர் 19-ஆம் தேதி கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்கள்:
திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம்.
இதனையடுத்து, மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.