- ரஷ்யாவில் ஜேம்ஸ்பாண்ட் வேலை செய்யவில்லை. ரகசியமாக எந்த வேலையிலும் ஈடுபடவில்லை, என முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் கூறியுள்ளார்.
- டில்லியில் போலி ஆவணங்களை பயன்படுத்தி சட்ட விரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தினர் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- மேற்கு நாடுகள் ரஷ்யாவில் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கின்றன என அந்நாட்டு அதிபர் புடின் கடுமையாக குற்றம் சாட்டி உள்ளார்.
- திராவிட மாடல் அரசு என்பதை விட, இது ஒரு ஆன்மிக அரசு என தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கூறினார்.
- முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற விழாவில் நடிகர் விஜய் கட்சியின் கொடி நிறத்தில் விஜய் உருவப்படம் அச்சிட்ட கைக்குட்டையை, கல்லுாரி மாணவர்கள் காண்பித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- போதைப்பொருள் விவகாரத்தில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் குற்றவாளிகளா? அப்பாவிகள். இரண்டு பேரை கைது செய்ததினால் பேசுகிறீர்கள். இல்லை என்றால் விற்பனை தொடர்ந்து இருக்கும், என நாம் தமிழர் கட்சியின் சீமான் கூறினார்.
- பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் இருந்து முதல் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா, பிரதமர் மோடியுடன் உரையாடிய வரலாற்று சிறப்பு மிக்க நாள் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
- ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்கி அழிக்கப்பட்ட பயங்கரவாதிகளின் முகாம்களை பாகிஸ்தான் அரசு மீண்டும் கட்டமைக்க தொடங்கியிருப்பது உலக நாடுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
- 2047 ஆம் ஆண்டுக்குள் அனைத்து துறைகளிலும் இந்தியாவை முதன்மையான நாடாக உருவாக்க, இளைஞர்கள் உறுதி எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
- நாட்டை ஒற்றுமையாக வைத்து இருக்க அம்பேத்கர் ஒரு அரசியலமைப்பை உருவாக்கினார். ஆனால், ஒரு மாநிலத்துக்கு என தனி அரசியலமைப்பு என்ற யோசனையை அவர் ஒரு போதும் ஆதரிக்கவில்லை, என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி ஆர் கவாய் கூறினார்.