- போலீஸ் விசாரணையில் மரணமடைந்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் குடும்பத்துக்கு த.வெ.க., தலைவர் விஜய் ஆறுதல் கூறினார். மேலும் அவரது குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவியையும் வழங்கினார்.
- பா.ஜ.,வுடன் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ள அ.தி.மு.க., அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி பிரசார பயணத்தில் பங்கேற்க, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
- பா.ம.க., பிளவுபட்டால், பா.ஜ.,வுக்கு எதிரான சக்திகள் பலம் பெற்றுவிடும்’ என, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, தமிழகத்தில் பிரபலமான அரசியல் ஆலோசகரும், அமித் ஷாவுக்கு நெருக்கமானவருமான பத்திரிகையாளர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- அ.தி.மு.க., – ஐ.டி., அணி ஆமை வேகத்தில் நகருகிறது என்பதால், அதன் நிர்வாகத்தை மாற்றி அமைக்க வேண்டும் என, அக்கட்சியினர் போர்க்கொடி துாக்கியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
- ஒரே கூட்டணியில் பா.ம.க., – வி.சி., கட்சிகள் இருப்பது நல்லது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதற்கு, வி.சி., மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
- துப்பாக்கியை காட்டி, என் வாயில் வைத்து சுட்டுவிடுவேன் என போலீசார் மிரட்டி இருக்கிறார்கள் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
- கர்நாடகா முதல்வர் சித்தராமையா உடன் கருத்து வேறுபாடா என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, நான் இப்போது எதையும் விவாதிக்க விரும்பவில்லை என துணை முதல்வர் சிவகுமார் மழுப்பலாக பதில் அளித்தார்.
- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேயர் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானியை கம்யூனிஸ்ட் பைத்தியக்காரன் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக சாடி உள்ளார்.
- அரசு முறை பயணமாக பிரதமர் மோடி கானா நாட்டிற்கு சென்றடைந்தார். விமான நிலையம் வந்த அந்நாட்டு அதிபர் மஹாமா வரவேற்றார்.
- சாட் ஜிபிடியை நம்ப வேண்டாம், என அதனை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மன் கூறியுள்ளார்.