விழுப்புரம் அருகே கெடாரில் தனியார் பள்ளிக்கு நிகராக அனைத்து வசதிகளுடன் கூடிய மாதிரி பள்ளியை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கானொளி வாயிலாக திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார் – விவசாய குடும்பத்தில் இருந்து வந்துள்ள உயர்க்கல்விக்கு வித்தாக அமையும் மாணவி தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட கெடாரில் ரூ. 56 கோடியே 80 லட்சம் மதிபீட்டில் கட்டப்பட்ட மாணவ, மாணவியர் தனித்தனி விடுதியுடன் கூடிய விழுப்புரம் மாவட்ட அரசு மாதிரி பள்ளியை காணொளி வாயிலாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து விக்கிரவாண்டி எம் எல் ஏ அன்னியூர் சிவா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெளதமசிகாமணி கெடாரில் அரசு மாதிரி பள்ளி கட்டிடத்தை குத்துவிளக்கு ஏற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். மாணவர்கள், மாணவிகளுக்கு என தனித்தனியாக நான்கு தளங்கள் கொண்ட விடுதிகள் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு ஏதுவாக ஆய்வகம் நூலகம், சுத்திகரிக்கபட்ட குடிநீர் வசதி, மாற்றுதிறனாளிகளுக்கு ஏற்ற வகையில் கழிப்பட வசதிகள் ஏற்படுத்தபட்டுள்ளன. மாதிரி பள்ளி சிசிடிவி காட்சிகளுடன் தனியார் பள்ளிக்கு நிகராக அரசு மாதிரி பள்ளி அனைத்து வசதிகளுடன் அமைக்கபட்டு திறக்கபட்டுள்ளன. இரண்டு அடுக்கு மாடியுடன் மாதிரி பள்ளி கடப்பட்டுள்ளதால் மின்தூக்கி லிப்ட் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த பள்ளியில் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பல்வேறு அரசு பள்ளிகளை சேர்ந்த 800 மாணவ, மாணவிகள் தங்கி படிக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன
கிராமப்புறத்தில் விவசாய குடும்பத்தில் இருந்து வந்த எங்களுக்கு இந்த இடம் எப்படி இருக்கும் என்று ஒரு அச்சம் இருந்தது. இங்கு வந்து பார்த்தப்போது தான் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. அரசுப்பள்ளி இந்த கட்டிடம் தனியார் பள்ளியை விட அனைத்து வசதிகளும் இங்கு உள்ளது மேலும் உயர்கல்வி படிப்பதற்கு அனைத்தும் இங்கே கற்றுக் கொள்வதற்கு எளிமையாக உள்ளது நான் பல பேருக்கு கற்றுக் கொடுக்கும் வகையில் தன்னை வளர்த்துக் கொண்டேன் என்றும் இந்த பள்ளி மாணவி பெறுமிதத்துடன் தெரிவித்து தமிழக அரசுக்கும் தமிழ்நாடு முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்தார்
















