மயிலாடுதுறையில் தனியார் கல்லூரியில் பயிலும் 1721 மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து வழங்கினர் :-
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜ்குமார் மற்றும் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவசம் அடிக்க நிதிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து வழங்கினர். தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 21 தனியார் கல்லூரிகளில் தற்போது இறுதியாண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணிணிகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள 1721 இறுதியாண்டு கல்லூரி மாணவ மாணவிகள் இந்த இலவச மடிக்கணினியை பெறுவர்.
