GST குறைப்பு ஏமாற்று வேலை… விஜயன் ஆவேசம்

பெண்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று குழித்துறையில் நடந்த அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் 17 வது மாநில மாநாடு பொதுக்கூட்டத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயன் பேச்சு; அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் 17 வது மாநில மாநாடு துவக்க விழாவை முன்னிட்டு படந்தாலுமூட்டிலிருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது. தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் கலந்து கொண்டு பேசியதாவது,

திருவள்ளுவர், மகாகவி சுப்பிரமணிய பாரதி, நாராயண குரு, ராமலிங்க அடிகளார், பெரியார் போன்றவர்களை தற்போதைய சூழ்நிலையில் நினைவுக்கு வருகிறது. அவர்களுடைய முயற்சிகள் மறக்க முடியாதது. பெண்கள் முன்னேற்றத்திற்கு அரும்பாடுபட்டார்கள். தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாது நாவினால் சுட்ட வடு என்ற திருவள்ளுவரின் திருக்குறளை நாம் நினைத்து பார்க்க வேண்டும். தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என பெரியாரை கூறலாம் அவர் செய்த நல்ல பல பணிகள் இன்றும் நிலைத்து நிற்கிறது .

பழைய காலங்களில் அவர்கள் செய்த சரித்திர சாதனைகள் இன்றும் நிலைத்து நிற்கிறது இவர்கள் போராட்டங்களில் தமிழ்நாடு கேரளாவின் பங்கு மிக முக்கியமானதாகும். பெண்களுக்கு கோயில் பக்கம் நடக்க முடியாது கோயிலுக்குள் வணங்க முடியாது என்றிருந்த நிலைமை மாறி அதற்கான முழு அனுமதியை பெற்று தந்தவர்கள் அன்றைய தலைவர்கள். தமிழகத்தில் தோள் சீலை போராட்டம் மிக முக்கியமானதாகும் நீண்ட பல சரித்திர போராட்டங்கள் தமிழகத்திலும் கேரளாவில் நடைபெற்று உள்ளது. அதன்பிறகு இந்த போராட்டங்களை இடதுசாரி கட்சிகள் முன் நின்று நடத்தி வருகிறதுபெண்கள் குழந்தைகள் நரபலிக்கு எதிராக ஜனநாயக மாதர் சங்கம் போராடி வெற்றி பெற்றுள்ளது.

மத்தியில் இப்பொழுது பெண்களுக்கு எதிராக உள்ளவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள். நாடு இக்கட்டான சூழ்நிலையை கடந்து கொண்டிருக்கிறது. 2014 ம் ஆண்டு பாஜ அரசு அதிகாரத்தில் வரும் போது பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று சொன்னார்கள். ஆனால் எதுவுமே செய்யவில்லை பெண்களுக்கு எதிராக செய்தவர்களுக்கு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை ஆனால் குற்றம் செய்தவர்களை மாலை போட்டு வரவேற்றார்கள்.

உத்திர பிரதேஷம் மாநிலத்தில் தான் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் அதிகரித்து உள்ளது கற்பழிக்கப்பட்ட தலித் குழந்தையை போலீசார் பெட்ரோல் ஊற்றிய கொலை செய்தார்கள். மத்திய அரசும் சங் பரிவாரும் இதை பார்த்துக்கொண்டு எந்த நடவடிக்கையும் முயற்சி செய்யவில்லை. பெண்கள் பாதுகாப்பிற்கு மத்திய அரசு எந்த சட்டமும் கொண்டு வரவில்லை வர்மா கமிஷன் குறித்து எந்த நடவடிக்கை எடுக்கவில்லை மத்திய அரசு பட்ஜெட்டில் பெண்களுக்கு எந்த நிதி ஒதுக்கவில்லை மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கும் குழந்தைகளுக்குமாக இரண்டு சதவீதத்திற்கும் குறைவாக தான் நிதி ஒதுக்கி உள்ளார்கள்.

மணிப்பூர் மாநிலத்தின் பெண்களுக்கு எதிராக பகிரங்கமாக பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளது பெண்கள் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர்.ஆனால் பாஜ அரசு கண்டு கொள்ளவில்லை. நமது நாட்டில் தான் இந்த நிலைமை என்றால் உலக அளவில் பார்த்தால் பாலஸ்தீனத்தை இஸ்ரேல் தாக்கி வருகிறது. இரண்டு வருடமாக இந்த போர் நடக்கிறது. இதில் 65 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் .அதில் 35 ஆயிரம் பேர் பெண்களும், குழந்தைகளும் ஆகும். அமெரிக்காவில் ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு விசாவிற்கு ரூபாய் 4 லட்சமாக இருந்த கட்டணம் 22 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியர்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்திய பொருள்களுக்கு 50% வரி உயர்த்தப்பட்டுள்ளது இதில் நமது நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு எதிராக மத்திய அரசு எதுவும் பேசவில்லை.

நமது நாட்டிற்கு மகத்துவமும் பாரம்பரியம் உண்டு போராட்டங்கள் மூலம் தான் வெற்றி பெற்றுள்ளோம் எனவே போராடுவதற்கு தயாராக வேண்டும். தமிழ்நாடு, கேரளா உட்பட எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் கவர்னர் மூலம் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். அகில இந்திய அளவில் ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது.

ஜிஎஸ்டியை குறைவு செய்வதற்கு அல்லது கூட்டுவதற்கு கவுன்சில் உள்ளது. ஆனால் கவுன்சில் கூட்டாமலே பிரதமர் அறிக்கை வெளியிட்டுள்ளார். தற்போதைய வரி குறைப்பால் பொதுமக்களுக்கு எந்த லாபமும் கிடையாது. இந்த குறைப்பால் ஒரு மூடை சிமெண்ட் ரூபாய் 30 குறைய வேண்டும் .ஆனால் சிமெண்ட் கம்பெனிகள் ரூபாய் 35 விலை ஏற்றி உள்ளனர். ஜிஎஸ்டி வரி குறைப்பால் கேரள மாநிலத்திற்கு ரூபாய் 8000 கோடி முதல் 10 ஆயிரம் கோடி வருவாய் குறைந்துள்ளது. இதனால் தமிழ்நாடு கேரளா மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கேரள முதல்வர் பினராய் விஜயன் பேசினார்

Exit mobile version