கிராம சபை என்பது நாடாளுமன்றத்துக்கு இணையான அதிகாரம் கொண்டது லட்சுமணன் பேச்சு
குடியரசு தினத்தை முன்னிட்டு மரகதபுரம் கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைப்பெற்றது – விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் லட்சுமணன் பங்கேற்பு.
நாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு விழுப்புரம் அடுத்த மரகதபுரம் கிராமத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் தேவி ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் லட்சுமணன் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் பத்மஜா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மரகதபுரம் ஊராட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள அரசின் திட்டங்கள் குறித்தும், நிறைவேற்றப்படவுள்ள திட்டங்கள் குறித்த வரவு செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மரகதபுரம் ஊராட்சிக்கு தேவையான புதிய பள்ளி கட்டிடம், அரசின் இலவச வீடு, தென்பெண்ணை ஆற்றில் புதிய தடுப்பணை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். கிராம சபை கூட்டத்தில் உரையாற்றிய விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் லட்சுமணன் கிராம சபை என்பது நாடாளுமன்றத்துக்கு இணையான அதிகாரம் கொண்டது. மரகதபுரம் ஊராட்சியில் உள்ள அரசு பள்ளி தரம் உயர்த்தப்படு என பேசினார்.
