மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள அரசு உதவி பெறும் ஏவிசி கல்லூரியில் 2024 ஆண்டு பட்டபடிப்பை முடித்தவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர். நாகராஜன் தலைமைவகித்து வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரியுமான கே. வெங்கட்ராமன் கலந்து கொண்டு
ஆயிரத்து 213 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில்:-
நீங்கள் கல்லூரி சேர்க்கையின் போது கண்ட கனவு இன்று நினைவாகியுள்ளது. இதனால் உங்களின் பெற்றோர்கள் மற்றும் பேராசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று பட்டம் பெறம் நீங்கள் மூன்று விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும் நீங்கள் பயின்ற கல்வி நிறுவனம் மற்றும் அதை நிறுவிய நிறுவனர்கள், உங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்கள், உங்களை ஆளாக்கிய பெற்றோர்கள் இந்த மூன்று விஷயங்களையும் நினைவில் வைத்து அனுதினமும் செயல்பட வேண்டும். படித்தது போதும் என்ற எண்ணம் இல்லாமல் மேற்படிப்புகள் படித்து நல்ல வேலைக்கு சென்று வாழ்வில் வளம் பெற வேண்டும். இன்று மாணவர்களை விட மாணவிகளே அதிக பதக்கங்களை வென்றுள்ளனர் என பேசினார்.
இதில் தேர்வு கட்டுப்பாட்டு நெறியாளர் டாக்டர் ஜி. கார்த்திகேயன் , துணை முதல்வர் டாக்டர் எம். மதிவாணன், டீன் டாக்டர் எஸ். மயில்வாகனன், முன்னாள் தேர்வு நெறியாளர் மேஜர் டாக்டர்.ஜி. ரவிசெல்வம், அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும்
திரளான பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அலுவலர்கள் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் பலர் செய்திருந்தனர்.
