கவர்னர் திமுக வின் ஊழலுக்கு தடையாக இருக்கிறார் – எல்.முருகன்

“தமிழக கவர்னர் திமுக வின் ஊழலுக்கு தடையாக இருப்பதால் அவரை எதிரியாக சித்தரித்து வருகிறது தமிழ்நாடு அரசு”. “திமுக அரசுக்கு எதிராக செயல்படுவோர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை எமர்ஜென்சியை நினைவு படுத்துகிறது” மேட்டுப்பாளையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பா.ஜ.க முகாம் அலுவலகத்திற்கு வருகை தந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கட்சியின் கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்ட முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பூத் கமிட்டிகள் உருவாக்குவது வரும் சட்டமன்ற தேர்தலை கூட்டணி கட்சிகளுடன் இணைந்து எதிர் கொள்வது குறித்து கலந்தாலோசித்தார்..

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன் “தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திமுக அரசின் ஊழலுக்கு தடையாக இருப்பதால் அவரை எதிரியாக சித்தரித்து வருகிறது தமிழக அரசு, செய்திகள் திமுக விற்கு எதிராக இருப்பதாக புதியதலைமுறை தொலைக்காட்சியை அரசு கேபிளில் இருந்து முடக்குவது, சமூக வலைத்தளங்களில் திமுக விற்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்வது போன்றவை கருத்து சுதந்திரத்தை முடக்கிய எமர்ஜென்சி காலத்தை நினைவு படுத்துகிறது, கரூர் துயர சம்பவம் குறித்து விசாரணை அறிக்கை வெளி வரும் முன் இது குறித்து அரசியல் ரீதியாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” என்றார்.

Exit mobile version