தஞ்சாவூரில் தேமுதிக கட்சி சார்பில் கும்பகோணம், திருவையாறு சட்டமன்ற பூத் கமிட்டி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பீகாரில் மட்டும் வாக்குத் திருட்டு நடைபெறவில்லை, இந்தியா முழுவதும் அந்த நிலைமை உள்ளது, தமிழ்நாட்டிலும் உள்ளது அது செய்தியாக வந்துள்ளது, இந்த முறைகேடுகளை தடுக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் வேலை, அதற்கு துணையாக நீதியரசர்களும் இருக்க வேண்டும், ஜனநாயக ரீதியில் நடக்கின்ற தேர்தல் நியாயமாக மக்களுக்காக உண்மை தேர்தலாக இருக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் பலமுறை வெளிநாடு சென்றுள்ளார், இதுவரை என்ன முதலீடு வந்துள்ளது என எதிர்க்கட்சிகள் வெள்ளை அறிக்கை கேட்கின்றனர்.
அதை அவர்கள் கொடுக்க வேண்டும், எத்தனை தொழிற்சாலைகள் வந்துள்ளது, எத்தனை பேருக்கு வேலை வழங்கியுள்ளது என முதலமைச்சர் தான் அதைக் கூற வேண்டும், இந்த முறை சென்று 15 ஆயிரம் கோடி முதலீடு வந்துள்ளது என்று கூறுகிறார், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெள்ளை அறிக்கையாக கொடுத்து செயல் வடிவம் பெறும் போது தான் முதல்வர் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியும் என்றும் தமிழகம் முழுவதும் உள்ள தூய்மை பணியாளர்களின் கோரிக்கையான பழைய ஊதியம் வழங்க வேண்டும், பணியை தனியாருக்கு விடாமல் அரசு வேலை வழங்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்தார், இந்நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதிஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
தூய்மை பணியாளர்களின் வயிற்றில் அடிக்கும் அரசு – பிரேமலதா விஜயகாந்த்
