எடப்பாடி சித்திரப்பாளையம் அரசு துவக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் உத்தரவுபடி வாழை இலையில் வடை பாயாசத்துடன் நல்விருந்து வழங்கப்பட்டது…
அனைத்து அரசு பள்ளிகளிலும் விருந்தோம்பல் பற்றி மாணவ மாணவிகள் தெரிந்து கொள்ளும் வகையில் நல்விருந்து வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டத்திற்க்குட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றியம், சித்திரபாளையம் அரசு துவக்கப்பள்ளியில் பயிலும் 57 மாணவ மாணவிகளுக்கு வாழை இலையில் மூன்று வகையான பொறியல், வடை, பாயாசம், அப்பளம், வாழைப்பழம் சாப்பாடு ஆகியவற்றை பெற்றோர்களின் ஒத்துழைப்போடு வழங்கி அசத்தினர்…
இந்த நல்விருந்து நிகழ்ச்சியில் அப்பளியின் தலைமை ஆசிரியர் தினேஷ் குழந்தைகளுக்கு பாசத்தோடு ஊட்டி விட்டு மகிழ்ந்தார்…
இந்த நல்விருந்து வழங்கியது மாணவ மாணவிகளுக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் இதுபோன்ற நல்விருந்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு மாணவ மாணவிகளுக்கு விருந்தோம்பல் பற்றி தெரிந்து கொள்ள வழிவகை செய்த தமிழக அரசுக்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர். இந்த நல்விருந்து நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள், ஆசிரியர் ஆசிரியைகள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.