புதிய காலத்தில் பொதுமக்கள், தாமதமின்றி பயணிக்க ரேபிடோ, ஓலா, ஊபர் போன்ற தனியார் பைக் மற்றும் கார் சேவைகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இவை நேரத்தைச் சேமிக்க உதவுவதுடன், பொதுப் போக்குவரத்தில் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் தவிர்க்கும் வாய்ப்பை அளிக்கின்றன. இதன் மூலம் பயணிகள் நேரத்தையும், நிறுவனங்கள் வருமானத்தையும் காக்கின்றன.
இந்த நிலையில், அதிக போக்குவரத்து இருக்கக்கூடிய காலை மற்றும் மாலை நேரங்களில், ஓலா, ஊபர் போன்ற வாடகை வாகன சேவை நிறுவனங்களுக்கு அடிப்படை கட்டணத்தை 2 மடங்கு வரை உயர்த்தி வசூலிக்க மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்னர், 1.5 மடங்கு வரை மட்டுமே கட்டண உயர்வுக்கு அனுமதி இருந்தது.
அதேபோல், போக்குவரத்து நெரிசல் இல்லாத நேரங்களில், அடிப்படை கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் வரை அதிகமாக வசூலிக்கலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது.