மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான புகழ்பெற்ற குரு பரிகார ஆலயமான வதான்யேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கே தனி சன்னதியில் மேதா தக்ஷிணாமூர்த்தி எழுந்தருளியுள்ளார். மார்கழி மாத வியாழக்கிழமை முன்னிட்டு சுவாமி அம்பாள் மற்றும் குரு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து தட்சிணாமூர்த்தி பகவானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மகாதீப ஆராதனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் தர்மபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் மற்றும் பக்தர்கள் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனர்

















