சென்னை: சர்வதேச சந்தை மாற்றங்களின் தாக்கத்தால் தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்றத்–தாழ்வுகள் காணப்படும் நிலையில், இன்று சென்னை சந்தையில் தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது.
நேற்றைய விலை உயர்வுக்கு பின், இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ₹800 குறைந்து ₹92,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் ₹100 குறைந்து ₹11,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று காலை தங்க விலை கிராமுக்கு ₹100 உயர்ந்து ₹11,500 ஆகவும், சவரனுக்கு ₹800 உயர்ந்து ₹92,000 ஆகவும் இருந்தது. மாலை மேலும் ஒரு கட்ட உயர்வு ஏற்பட்டு, கிராமுக்கு ₹11,600 மற்றும் சவரனுக்கு ₹92,800 ஆக விற்பனையானது. இதனால், ஒரே நாளில் சவரனுக்கு ₹1,600 உயர்வு பதிவாகியது. இன்றோ விலை மாற்றம் மீண்டும் தாழ்வை நோக்கி மாறியிருக்கிறது. வெள்ளி விலையும் குறைந்த நிலையில், கிராமுக்கு ₹3 குறைந்து ₹173க்கு விற்பனை செய்யப்படுகிறது.
