கும்மிடிப்பூண்டி அருகே 13 வயது சிறுமி மீது கூட்டு பாலியல் வன்கொடுமை : 7ஆம் வகுப்பு மாணவர் கைது

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே 13 வயது சிறுமி ஒருவருக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி முடிந்ததும் வீடு திரும்பிக்கொண்டிருந்த சிறுமியை மர்ம நபர் ஒருவர் கடத்தி, அருகிலுள்ள மாந்தோப்பில் பாலியல் வன்கொடுமை நிகழ்த்தியுள்ளார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையின் பின்னணியில் 7ஆம் வகுப்பு மாணவன் ஒருவனை கைது செய்த அவர்கள், அந்த சிறுவனை சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் அடைத்துள்ளனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மற்ற இரண்டுபேரையும் தேடுதல் பனி நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை விரிவாக்கி, 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது. அந்த மாநிலத்தின் சூலூர்பேட்டை, தடா உள்ளிட்ட இடங்களில் வலைவீசப்பட்டு வருகின்றது. குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், போலீசார் துரித நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆரம்பாக்கம் காவல் நிலையம் அருகே அனுமதி மறுக்கப்பட்டதால், சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பெண்கள் அணி உறுப்பினர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கட்டுப்படுத்த முயன்ற சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொடூரச் சம்பவம் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி, குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

Exit mobile version