செங்கல்பட்டு மாவட்டம் விநாயகர் சதுர்த்தியைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தங்கள் வீடுகளிலும், பொது இடங்களிலும் வழிபட்ட விநாயகர் சிலைகளை இன்று மாமல்லபுரம் கடலில் கரைத்தனர். இந்த கரைப்பு நிகழ்வில், காவல்துறையினர் பாதுகாப்புடன் சிலைகள் பாதுகாப்பான முறையில் கடலில் கரைக்கப்படுவதை உறுதி செய்தனர்.
மாமல்லபுரம் பகுதியில் கரைப்பதற்காக எடுத்து வரப்பட்ட விநாயகர் சிலைகளை நீச்சல் தெரிந்த மீனவர்கள் பயன்படுத்தி விநாயகர் சிலைகளை எடுத்துச் சென்று கடலில் கரைத்தனர்.
அப்பொழுது விதவிதமான வர்ணம் நிறத்தில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கப்பட்டனர்.
இதில் செங்கல்பட்டு அதன் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் நகரத்தில் இருந்தும் விநாயகர் சிலைகள் மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் கடலில் கரைக்கப்பட்டன. மேலும் திருக்கழுக்குன்றம் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது . அதில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலையை மாமல்லபுரம் எடுத்துச் செல்லப்பட்டனர்.
