ரேஷனில் இலவச வேஷ்டி – சேலை.. தீபாவளியையொட்டி அறிவித்த தமிழக அரசு..

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இலவச வேஷ்டி மற்றும் சேலை பெறவுள்ளார்கள்.

தமிழக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இயக்குநர் தெரிவித்ததாவது, பண்டிகைக்கு முன் முதியோர் ஓய்வூதிய திட்ட பயனாளர்கள் விரைவில் இவை பெற்றுக்கொள்ள வாய்ப்பு உண்டு. முதியோர் கைரேகை பாதிக்கப்பட்டிருந்தாலும், கையெழுத்து மூலம் வாங்கும் வசதி அதிகாரிகள் வழிகாட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இலவச வேஷ்டிகள் மற்றும் சேலைகள் அடுத்த வாரம் முதல் நியாய விலை கடைகளில் பெறக்கூடும். மாவட்ட வழங்கல் அலுவலர்கள், தங்கள் மாவட்டங்களில் பட்டியலின்படி, கோரியவர்களுக்கு சரியான முறையில் விநியோகம் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். நியாய விலை கடை பணியாளர்கள், பயனாளிகள் பட்டியலில் பெயர் உள்ள முதியோர் ஓய்வூதிய திட்ட பயனாளர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் விநியோகம் செய்யப்பட வேண்டும் எனும் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, தீபாவளியை மக்கள் சிறப்பாக கொண்டாட உதவும் விதமாக தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

Exit mobile version