திருவாரூரில் போலியாக பங்குச்சந்தை நிறுவனம் நடத்தி இரண்டரை கோடிக்கும் மேல் மோசடி செய்த பாஜக மாவட்ட பொதுசெயலாளர் மனைவி மற்றும் நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்ததால் பரபரப்பு ஏறப்பட்டது.
திருவாரூர் அருகே சுந்தரவிளாகம் பகுதியில் சுமே~; அரவிந்த் இன்ஜினியரிங் படித்துவிட்டு நிரந்தரமான வேலை தேடிக்கொண்டு இருந்த நிலையில் திருமணமாகி குழந்தையுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் திருவாரூர் அங்காளம்மன் கோவில் தெருவில் வசித்துவரும் புகழேந்திரன் என்பவர் அவருக்கு தெரிந்த நண்பர் பன்னாட்டு பங்குச் சந்தையில் திறமை பெற்ற நபராக இருந்து கோடிகளை எளிதாக சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் என்றும், அவரை நான் உனக்கு அறிமுகப்படுத்துகிறேன். நீயும் நன்றாக சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதனை உண்மை என நம்பிய சுமே~; அரவிந்திடம், திருக்கண்ணமங்கை கொத்த தெருவில் வசிக்கும் கோபி என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளார்.
கோபி, அரவிந்த்திடம், மற்றும் சுயுலுணு என்ற வெளிநாட்டில் பதிவு பெற்ற நிறுவனத்தில், தான் பங்கு சந்தையில் பல கோடிகள் சம்பாதிக்கிறேன் என்றும்.. அதே போல நீயும் பல கோடிகள் சம்பாதிக்கலாம் என்று நயமாக, ஆசை வார்த்தைகள் பேசி அவர் மீது அதீத நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.
இதனை நம்பிய சுமே~; அரவிந்த் அவருடைய சேமிப்பு பணம் மற்றும் அவரது உறவினர்கள் நண்பர்கள் உள்ளிட்ட 35 நபரிடம் மொத்தமாக 2 கோடியை 64 லட்சம் பெற்று அவரது வங்கி கணக்கு மூலமாக கோபி கொடுத்த திருவாரூர் பாஜக மாவட்ட பொது செயலாளர் சங்கர் என்பவரது மனைவி நர்கீஸ் வங்கி கணக்கு உள்ளிட்ட ஐந்து நபர்களது வங்கி கணக்கிற்கு 2022 வருடம் அக்டோபர் மாதம் முதல் 2024 ஜனவரி மாதம் வரை பல்வேறு தேதிகளில் பணம் அனுப்பி உளளார்.

இதனைத் தொடர்ந்து கோபியும் நான்கைந்து மாதமாக சுரே~; அரவிந்த் கொடுத்த பணத்திற்கு பங்குத்தொகை கொடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து பணம் கொடுத்து வந்த கோபி திடீரென பணம் கொடுப்பதை நிறுத்திய நிலையில்., சுரேஷ் அரவிந்த் கைபேசி மூலமாக கோபியை தொடர்பு கொண்ட போது கைப்பேசி எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. கோபியை தேடி திருக்கண்ணமங்கையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று கேட்டபோது அவரது குடும்பத்தினர் கோபி இங்கு வரவில்லை எனக் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் கோபியின் நண்பர்களான திருவாரூர் மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் சங்கர் என்ற பிரபு, சங்கரின் மனைவி நர்கீஸ், புகழேந்திரன், மணிகண்டன், வசந்த ராஜன் ஆகியோர் பாதிக்கப்பட்ட சுமே~; அரவிந்தை நேரிலும் கைபேசியிலும் கொலை மிரட்டல் விட்டதாக கூறப்படுகிறது. மேலும் கோபி கொடுத்த வங்கி கணக்குகள் இவர்களது வங்கி கணக்கு என தெரியவந்துள்ளது. மேலும், தன்னை ஏமாற்றிய கோபி மற்றும் அவரது நண்பர்கள் ஐந்து பேர் மீதும் சுமே~; அரவிந்த் திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்
மோசடி ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உடனடியாக பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் பல பேர் இதுபோல பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..
