புங்கனூர் ஏரி பகுதியில் சுமார்87லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுலா வளர்ச்சி பணிக அடிக்கல் நாட்டு விழா

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலகிரி மலையில் அமைந்துள்ள புங்கனூர் ஏரியில் தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சார்பாக சுமார் 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மிதக்கும் படகில் ஏறும் மேடை, வரவேற்பு வளாகம், புல் தரை அமைத்தல், மின்விளக்குகள் அமைத்தல், பாதுகாப்பு வேலி, அமரும் இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் ஆகியோர் குத்து விளக்கேற்றி அடிக்கல் நாட்டு விழாவை தொடக்கி வைத்தனர்

Exit mobile version