மயிலாடுதுறை நகராட்சி சார்பாக ரூ 90 லட்சம் மதிப்பீட்டில் புதிய நகராட்சி வணிக வளாகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவல் நிலையம் அருகே நகராட்சிக்கு உட்பட்ட வணிக வளாகம் இயங்கி வந்தது இக்கட்டிடம் மிகவும் பழுதடைந்ததன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டது இதனைத் தொடர்ந்து வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மயிலாடுதுறை நகராட்சியின் சார்பாக ரூபாய் 90 லட்சம் மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது அதன்படி இன்று புதிய வணிக வளாகம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது மயிலாடுதுறை நகர மன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில் நகர் மன்ற துணைத் தலைவர் சிவகுமார் நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Exit mobile version