அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வழிகாட்டுதலின்படி ஒடிசா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பட்டனாயக் அவர்கள் வட்டார வாரியாக நகரவாரியாக நிர்வாகிகளை கருத்துக்களை கேட்டறிந்து அகில இந்திய தலைமைக்கு எடுத்துக் கூற மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்ற தொகுதியின் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளர் கனிவண்ணன் உள்ளிட்ட ஆகியோர் கலந்து கொண்டனர்.

















