திருவாரூரில் நடைபெற்ற அம்மா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் R.காமராஜ் பேச்சு

அம்மா உயிரோடு இருந்திருந்தால் திமுக இல்லாமல் போயிருக்கும்..”இந்த ஆட்சி தொங்கிக் கொண்டிருக்கிறது மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரப்போகிறது..”
திருவாரூரில் நடைபெற்ற அம்மா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பேச்சு…
திருவாரூர் மாவட்ட அதிமுக சார்பாக புரட்சி தலைவி அம்மா அவர்களின் 78- வது பிறந்தநாள் பொதுக்கூட்டம்.. மற்றும் நலத்திட்டம் வழங்கும் விழா திருவாரூரில் நடைபெற்றது.
முன்னாள் முதலமைச்சரும், கழக பொதுச் செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர் கட்சி தலைவருமான புரட்சித் தமிழர் எடப்பாடியாரின் அறிவிப்பின்படி…
திருவாரூர் மாவட்ட அதிமுக சார்பாக புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்டம் வழங்கும் விழா திருவாரூரில் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பொன் வாசுகிராம் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்.. திருவாரூர் நகர செயலாளர் ஆர்.டி மூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து..கழக அமைப்புச் செயலாளரும்.. திருவாரூர் மாவட்ட கழகச் செயலாளரும்.. முன்னாள் அமைச்சருமான ஆர். காமராஜ் சிறப்புரையாற்றினார்..
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ்… “அம்மா உயிரோடு இருந்திருந்தால் திமுக இல்லாமல் போயிருக்கும்.. என்றும், திமுக கருணாநிதி தலைமைக்கு பின்னால் இரண்டு முறை ஆட்சிக்கு வந்தது வரலாறு கிடையாது.. எம்ஜிஆர் காலை பிடித்து முதலமைச்சர் ஆனார் கருணாநிதி.. என்றும், ஏழைக்கு வீடு கட்டும் திட்டம் கோர்ட்டில் ஸ்டேயில் இருக்கே அதற்கு கோர்ட்டுக்கு போனீர்களா..? என்றும், இந்த ஆட்சி தொங்கிக் கொண்டிருக்கிறது மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரப்போகிறது..”என்றும் பேசினார்.
முன்னதாக.. தலைமை கழக பேச்சாளர் எழுத்தாளர் தில்லை செல்வம் மற்றும் இளம் பேச்சாளர் ரஞ்சித் ஆகியோர் பேசினர்.
தொடர்ந்து நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில்... மாவட்டக் கழக பொருளாளர் ஏ. என். ஆர். பன்னீர்செல்வம், மன்னார்குடி நகர செயலாளர் ஆர்.ஜி.குமார், மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கலியபெருமாள், திருவாரூர் ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன் மற்றும் செந்தில்வேல், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் எம். ஆர். பாலாஜி, தகவல் தொழில்நுட்ப தஞ்சை மண்டல செயலாளர் தியாகராஜன்,  வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ரயில் பாஸ்கர், மாவட்ட அம்மா பேரவை துணைத் தலைவர்  மதியழகன், மற்றும் சார்பு அணி அனைத்து நிலை பொறுப்பாளர்கள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Exit mobile version