திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக.. முன்னாள் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டு.. தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆக பணியாற்றி.. நன்னிலம் தொகுதி மக்களுக்கு பல நலத்திட்டங்களை வழங்கி வருகிறார்..
அதன் ஒரு பகுதியாக நன்னிலம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் நன்னிலம், குடவாசல், வலங்கைமான் உள்ளிட்ட ஒன்றிய பகுதிகளில் நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து இன்று நன்னிலம் பகுதியில்..
நன்னிலம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமில் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் பொது மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது..
நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட நன்னிலம் சன்னநல்லூர் பூந்தோட்டம் மாப்பிள்ளைக்குப்பம் சனி பேரி மற்றும் அதனை சுற்றியுள்ள நாம பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.
மேலும் இந்த முகாமில் ரத்த அழுத்தம்.. இசிஜி. எக்கோ. ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது.. தொடர்ந்து நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
இந்த முகாமில் … பிரசித்தி பெற்ற சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மருத்துவமனைகளை சார்ந்த சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் ஆலோசனைகளை வழங்கினர்..
இந்த நிகழ்வில்.. முன்னாள் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கே கோபால், நன்னிலம் தெற்கு ஒன்றிய செயலாளர் ராம.குணசேகரன், வடக்கு ஒன்றிய செயலாளர் சி. பி. ஜி அன்பு.. குடவாசல் ஒன்றிய துணைத் தலைவர் எம். ஆர். தென்கோவன்.. நன்னிலம் நகர செயலாளர் பக்கிரிசாமி.. தகவல் தொழில்நுட்ப பிரிவு தஞ்சை மண்டல இணை செயலாளர் செல். சரவணன்.. திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சின்னராஜ், மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் எம்ஜிஆர் கருப்பையன்.. எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சம்பத்.. உள்ளிட்ட அதிமுக நகர பேரூர் கழக பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்..


















