டெல்லியில் உள்ள மோடிக்கு காவடி தூக்கிக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எல்லாம் பதில் சொல்லும் வகையில் 5000 ஆயிரம் ரூபாயை தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கியிருப்பதாக – அன்னியூரில் முதல்வர் காணொளி வாயிலாக திறந்து வைத்த அன்பகம் கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் பொன்முடி பேச்சு
பேட்டி க.பொன்முடி (முன்னாள் அமைச்சர்)
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி அன்னியூரில் எம்.எல்.ஏ அன்னியூர் சிவா ஏற்பாட்டில் புதியதாக கட்டப்பட்ட அன்பகத்தை(கட்சி அலுவலகம்) திமுக தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னை அறிவாலயத்திலிருந்து கானொளி வாயிலாக திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து அன்பகத்தை திமுக துணை பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கு ஏற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முன்னாள் எம்பி பொன்.கௌதம சிகாமணி, விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூர் சிவா உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்றனர்
அதனை தொடர்ந்து மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி ,பெண் அடிமை பேசி வந்த தமிழ்நாட்டில் பெண் உரிமையை வளர்பதற்காக பெண் உரிமை மாநிலமாக தமிழகத்தை மாற்றி வருவதாகவும், பெண்களுக்கான உரிமையை வளர்பதற்காக ஐந்தாயிரம் ரூபாயை முதல்வர் அறிவித்திருப்பதாகவும்,பெண்கள் என்றால் உரிமை இல்லை என்ற நிலையை மாற்றி இன்று பெண்களுக்கான உரிமையை வழங்கி பெண்களின் வளர்ச்சிக்காக திராவிட மாடல் ஆட்சி நடைபெறுவதாக கூறினார்.
டெல்லியில் உள்ள மோடிக்கு காவடி தூக்கிக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எல்லாம் பதில் சொல்லும் வகையில் 5000 ஆயிரம் ரூபாயை தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கியிருப்பதாகவும் அதிமுகவின் கடந்த கால ஆட்சியில் தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என பல திட்டங்களை ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளதாக பொன்முடி தெரிவித்துள்ளார்.
