மத்திய பிரதேசம் குவாலியரில் ஐம்பதாவது ஜூனியர் தேசிய கேரம் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த ஒன்னாம் தேதி முதல் நான்காம் தேதி வரை நடைபெற்றது 300 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர் இந்த போட்டியில் விழுப்புரம் தூய இருதய ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியின் பிளஸ் 2 பயிலும் மாணவர் விழுப்புரத்தைச் சேர்ந்த பவன் குமார் பங்கேற்று விளையாடினார் இதில் அவர் தனிநபர் போட்டியிலும் ஒட்டுமொத்த அணி சார்ந்த சேம்பியன்ஷிப் போட்டியிலும் முதலிடத்தை பிடித்து தங்கம் வென்று சாதனை படைத்தார் தமிழகத்திற்கு மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த அவரை விழுப்புரம் மாவட்ட கேரம் அசோசியேஷன் செயலாளர் இளஞ்செழியன் மற்றும் நிர்வாகிகள் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகிகள் அனைவரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர் இதனை தொடர்ந்து மாணவர் பவன் குமார் தான் ஜெயித்த தங்க கோப்பைகளோடு பெற்றோர்களுடன் திமுக மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சருமான பொன்முடியையும் அவரது மகன் கள்ளக்குறிச்சி முன்னாள் எம்பி கௌதம் சிகாமணி ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார் உடன் பெற்றோர் தந்தை விஜயகுமார் தாய் சசிகலா மற்றும் கேரம் சங்க செயலாளர்கள் இளஞ்செழியன் பொருளாளர் கோபிகிருஷ்ணன் இணை செயலாளர் கவுதமன் ஆகியோர் உடன் இருந்தனர்

















