விபத்தில் சிக்கிய முதியவரை முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முன்னாள் அமைச்சர் காமராஜ்.” நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த மக்கள்.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள அவளிவநல்லூர் பகுதியில் விபத்தில் சிக்கிய முதியவரை அப்பகுதியாக சென்ற முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்..
நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமான் மேற்கு ஒன்றியம் சார்ந்த அவளிவநல்லூர் பகுதியில்...இருசக்கர வாகனத்தில் சென்ற சுப்ரமணியன் என்ற முதியவர் விபத்தில் அடிபட்டு நடக்க முடியாமல் படுகாயத்துடன் இருந்தார். இந்த நிலையில்..
அவ்வழியே சென்ற திருவாரூர் அதிமுக மாவட்டச் செயலாளரும்.. கழக அமைப்புச் செயலாளரும்.. முன்னாள் தமிழக அமைச்சரும்.. நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர். காமராஜ்..
விபத்தில் படுகாயமடைத்த சுப்பிரமணியனுக்கு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதனைக் கண்டு நெகிழ்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் முன்னாள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
