தமிழகத்திலேயே முதன்முறையாக வேட்பாளர் அறிவிப்பு வருமுன் காளி கடைவீதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த காளி ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் காளி காந்தி தலைமையில் தமிழகத்திலேயே வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு வீதி வீதியாக சென்ற திமுகவினர் ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் கலைஞர் வாழ்க ஸ்டாலின் வாழ்க என கோஷமிட்டு வாக்கு சேகரிப்பில் காளி கடை வீதியில் கடை கடையாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் அப்போது ஆண்கள் பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டவர்கள் அனைவரும் வருகின்ற ஒன்பதாம் தேதி திருச்சி மலைக்கோட்டை மாநகரத்தில்
கழக மாநில மாநாடு நடைபெற உள்ளதாகவும் அதில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் தமிழகத்தில் மீண்டும் திமுக அரசு வெற்றி பெற்றிடவும் நம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.














