திருவாரூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்&சகோதரியை கொலை செய்ய முயன்ற ஐந்து நபர்களை அதிரடியாக கைது

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே பத்தூர் கிராமம் உள்ளது. இங்கு முன்னாள் ஊராட்சி தலைவராக பதவி வகித்தவர் சுசீலா (70) இவரது கணவர் விஸ்வநாதன். இவர்களது மகன் சுஜின்பாலாஜி (30) சுசீலாவின் தங்கை வனரோஜா (55 ) ஆகியோர் கடந்த 19ஆம் தேதி உறங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலை சுமார் 3 மணி அளவில் இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் முகமூடி அணிந்து வந்துள்ளனர்.
இதில் மூன்று நபர்கள் மட்டும் வீட்டின் பின்பக்கம் வழியாக மாடி பகுதிக்கு சென்று வீட்டின் முன் பகுதிக்கு தப்பி ஓடுவதற்கு வசதியாக வந்து கிரில் கேட்டின் பூட்டை உடைத்து விட்டு பின்னர் முன்பக்க கதவில் பூட்டை உடைத்து உள்ளே வீட்டில் புகுந்து தூங்கி கொண்டு இருந்த சுசிலா மற்றும் வனரோஜா ஆகிய இருவர் மீதும் தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்ய முயன்று உள்ளனர்.

அப்போது இருவரும் சத்தம் போட்டதையடுத்து மற்றொரு அறையில் தூங்கிய சுஜின் பாலாஜி வெளியே வந்து பார்த்துள்ளார் .

தனது அம்மாவையும் சின்னம்மாவையும்
மூன்று பேர் தலையறையை வைத்து அமுக்கிக் கொண்டிருப்பதை கவனித்ததை பார்த்தவுடன் அவர்களிடமிருந்த காப்பாற்ற முயன்றுள்ளார்.

அப்போது கொள்ளையர்களில் ஒருவன் வைத்திருந்த அறிவாளை எடுத்து சுஜின் பாலாஜியை வெட்ட முயற்சி செய்துள்ளான்.

அப்போது சுஜின் பாலாஜி அருகில் இருந்த நாற்காலியை எடுத்து அவனை தாக்கி உள்ளார்

பின்னர் மூன்று பேரும் சத்தம் போடவும் அக்கம் பக்கம் இருந்தவர்கள் சத்தம் போட்டவுடன் உள்ளே இருந்த மூன்று பேரும் தப்பி ஓடி வாசலில் இருந்த மூன்று பேர் சேர்ந்து ஆறு பேரும் தப்பி ஓடி விட்டனர்.

அவர்கள் கொண்டு வந்திருந்த இரும்பு ஆயுதங்கள் ஒருவனது பேண்ட் சர்ட் ஆகியவற்றுடன் கூடிய ஒரு பேக்கையும் அவர்கள் கொண்டு வந்த இரண்டு இருசக்கர வாகனங்களையும் விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக, தஞ்சாவூரை அடுத்த கரந்தை முஸ்தபா தெருவைச் சேர்ந்த அஜல் பிரவீன் (21), தஞ்சை சீனிவாசபுரம் அப்துல் வஹாப் தெருவைச் சேர்ந்த பரத்குமார் (22), தஞ்சை தோட்டக்குடி குருவாடியைச் சேர்ந்த விஜய் (19), தஞ்சை பள்ளிஅக்ரஹாரம் சாரதி நகரைச் சேர்ந்த ஹரிஹரன் (25), கரந்தை கிருஷ்ணன் கோயில் தெருவைச் சேர்ந்த பழனியப்பன் (18) ஆகிய 5 பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்

Exit mobile version