மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை- மீன் வளத்துறை உதவி இயக்குனர்
வட தமிழகம் மற்றும் தமிழக கடற்கரை பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45கி.மீ. வரை காற்று வீச கூடும் சில நேரங்களில் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையத்தின் செய்தி வெளியீட்டின் படி இன்று 09.12.2025 ந்தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடித்தொழிலுக்கு செல்லக்கூடாது என்று மயிலாடுதுறை மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களுக்கு தபால் மூலம் அறிவிப்பு கொடுத்துள்ளார்.
