சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் வாகன ஓட்டுனர்களுக்கு முதலுதவி சிகிச்சை குறித்த பயிற்சியும், உடல் பரிசோதனையும் நடைபெற்றது :-
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு மோட்டார் வாகன ஆய்வுத் துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு, சாலை விதிகள் விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்ற வருகின்றன அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் வாகன ஓட்டிகளுக்கு முதலுதவி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உடல்நலம் பேணுவது, அவசர நிலையின் பொழுது எவ்வாறு முதல் உதவி செய்வது என்பது பற்றி விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து வாகன ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை உள்ளிட்ட உடல் பரிசோதனை செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான வாகன ஓட்டுனர்கள் இதில் பங்கேற்று பயன் பெற்றனர்
